போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுக்கு ஆதரவை கோரும் சாகல ரத்நாயக்க

Date:

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றியடையச் செய்வதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தாவூதி போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடான ‘ஆஷாரா முபாரகா’ ஜூலை ஆறாம் திகதி முதல் 10 நாட்கள்  இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில்  குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை  எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...