மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துவிட்டார்: ஜனாதிபதி சக்வேரா அறிவிப்பு

Date:

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு  புறப்பட்டது.

ஆனால், 10:02 மணிக்கு திட்டமிடப்பட்டபடி Mzuzu விமான நிலையத்தில் விமானத்தை தரையிறங்க முடியவில்லை.

இதனால் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தலைநகருக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது.

ஆனால், விமானத்தின் தொடர்பு ரேடாரில் இருந்து விலகிச் சென்றதால், விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் விமானிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

“நான் மிகவும் வருந்துகிறேன். இது ஒரு சோகமான நிகழ்வு என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வருந்துகிறேன்.

தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் சிக்கன்காவா வனப்பகுதியின் அருகே விமானத்தை கண்டுபிடித்துள்ளனர்.

விமானம் முற்றிலும் அழிந்துள்ளது. பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர்.” என சக்வேரா, கூறியுள்ளார்.

மலாவியில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இந்தப் பின்புலத்திலேயே விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...