முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டில் கொள்ளை

Date:

பன்னிபிட்டிய, கலல்கொட கிராமோதய மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து பல சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெறுமதியான கைக்கடிகாரங்கள், மடி கணினிகள்,  இயந்திரங்கள், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்ட சொத்துக்களில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் பாதுகாப்பு கமெரா அமைப்பின் சேமிப்புக் கருவியையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சசித்ர சேனநாயக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் தேவைக்காக வீட்டை விட்டு வெளியேறிய போது, ​​தரைத்தளத்தில் உள்ள ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறுநாள் இரவு   சசித்ராவும் அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பியபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் முன்பக்க கதவும் திறந்திருந்துள்ளது. அதனையடுத்தே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...