ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி  காலை 09.30 மணிக்கு கொழும்பு 10 தபால் தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கையின் ஜக்கிய நாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் மாா்க்ஸ் அன்றோ ரன்சே கௌரவ அதிதியாக இலங்கை ஈரான் இஸ்லாமிய குடியரசின் துாதுவர் கலாநிதி அலி றீசா டெல்கோஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதம பேச்சாளர்களாக பிரபல எழுத்தாளர் எம்.எல்.ஏ மன்சூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முன்னாள் சட்ட சபை உறுப்பினருமான கே.ஏ எம் முஹமட் அபுபக்கர், ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இதன்போது சன்டே ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் மெனிக் டி சில்வா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதேவேளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் திருமதி புர்ஹான் பீ.இப்திக்கார், வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி முகாமையாளர் எம்.சித்தீக் ஹனீபா, பிறை எப்.எம்.வானொலி தலைமையதிகாரி பசீர் அப்துல் கையும், மூத்த ஊடகவியலாளர்களான சுகைப் எம் காசீம், அமீர் ஹூசைன்,  ஊடகவியலாளர் எம்.எம்.எம் பசீர், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ கஜன், தினக்குரல் ஆசிரியர் ஆர்.பி ஹரன், உதயம் செய்தி ஆசிரியர் சிராஜ் எம். ஷாஜகான் ஆகியோரும் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்வில் போரத்தின் உதவித் தலைவர் ஊடகவியலாளர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஊக்குவிப்புக்காக விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...