“மஹ்ரூப் மொஹிடீனின் மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்” முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா இரங்கல்

Date:

 முஸ்லிம் சேவை பணிப்பாளர் ரினோஸியா வெளியிட்டுள்ள இரங்கல்

‘நல்வழி’ தொடர் நிகழ்ச்சியில் மஹ்ரூப் மொஹிடீனின் குரலில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சித் தொகுப்பு நாளாந்தம் வானொலி முஸ்லிம் சேவையில் மனதுக்கு இனிமை தரக்கூடியதும் ஆன்மீக சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமையும். அவர், பல சிறந்த ,தமிழ் நாடகங்களையும் தயாரித்துள்ளதுடன் ஆரம்பகாலங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

முஸ்லிம் சேவையில் அவருடன் இணைந்து செய்த ‘கருத்துக்களம்’ நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தமானவை, அமைதியானவரும் ஆர்ப்பாட்டமில்லாதவருமான அவர் , வானொலித் துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.

அவரது மரணம் உண்மையிலேயே முஸ்லிம் சேவைக்கு பேரிழப்பாகும்.

இதேவேளை அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகையின் பின் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...