இன்றும் நாடளாவிய ரீதியில் ஆசிரியர்-அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று  நடைபெறாது  என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (28) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...