ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளராக கொழும்பு மா நகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஷராப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற அமைப்பாளர் நியமன நிகழ்வின் போது ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியை இதற்கு முன்னர் பழீல் ஏ. கபூர் டாக்டர் MCM கலீல் ரணசிங்க பிரேமதாச, ஜாபிர் ஏ.காதர் சிரிசேன குரே மொஹமட் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் விகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.