காதலுக்காக அடித்துகொண்ட பாடசாலை மாணவர்கள்: மெனிக்ஹின்ன பகுதியில் 5 மாணவர்கள் கைது!

Date:

மத்திய மாகாணத்தின், மெனிக்ஹின்ன பகுதியில் காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் 16 -18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு பாடசாலை மாணவிக்காகவே குறித்த சண்டை இடம்பெற்றுள்ளதுடன், 17வயதுடைய மாணவன் பலத்த காயங்களுக்கு இலக்காகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25 ஆம் திகதி இரவு 7.30 க்கு திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றதுடன் மெனிக்ஹின்ன பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அண்மைக்காலமாக கல்வித்துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும்இ மாணவர்களுக்டையேயான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

அண்மையில் ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றன. 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் மற்றுமொரு பாடசாலை மாணவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

மேலும், 17 வயதுடைய மாணவரொருவர் தனியார் வகுப்புக்கு அருகில் அழைத்துச் சென்று பலமாகத் தாக்கியதில் அவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...