இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன.
கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஜபாலியா பிரதேச மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கொண்டாடி பெருநாளை சந்தோஷப்படுத்தி அதன்மூலம் தங்களுடைய உள உறுதியை வெளிப்படுத்துகின்ற இந்தக்காட்சி உலகத்துக்கு மிகப்பெரிய செய்தியை சொல்கின்றது.