கேகாலை நகர ஜும்ஆ மஸ்ஜிதுன் பள்ளிவாசலில் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு (Open Mosque day) நேற்று (25) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கேகாலை மாவட்ட செயலகம் (முஸ்லிம் கலாச்சார பிரிவு), இஸ்லாமிய கற்கை மையத்தின் நல்லிணக்க மையம், கேகாலை மாவட்ட முஸ்லிம் சம்மேளனம், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்கள், சமயத் தலைவர்கள், கேகாலை மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள், இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சகோதர இன மக்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பாக இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும், சமூக மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பள்ளிவாசல்களில் தொழுகைகள், குத்பா உரைகள், குர்ஆன் ஓதுதல் மருதாணி இடுதல், அரபு எழுத்தணி,சமய நிகழ்வுகள், இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யதல் போன்ற விடயங்களை நேரடியாக தெளிவுபடுத்தும் நிகழ்வாகவும் அமைந்திருந்நதன.