சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை அணி: எம்.பிக்கள் கருத்து

Date:

டி 20 உலக் கிண்ணத் தொடரில் விளையாட, அமெரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கு எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரினால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில்“

இலங்கை அணி மட்டுமல்லாமல், அயர்லாந்து அணி மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ப்ளோரிடா விமான நிலையத்தில் சுமார் 7 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஐ.சி.சி.க்கு நாம் இதுதொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளோம். போட்டியின்போது, பங்களாதேஷ் அணி தான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இரண்டாவதாக இலங்கை அணி நீண்ட தூரம் பயணிக்கின்றது.

அமெரிக்க கிரிக்கெட் சபையும் ஐ.சி.சியினால் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இந்தப் போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெறுகின்றன.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய, இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவிக்கையில்” விமானம் தாமதம் என்பது ஒரு பிரச்சினை மட்டும்தான். கிரிக்கெட் வீரர்கள் தங்குமிடத்திற்கும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கும் இடையில் 45 நிமிட போக்குவரத்து இடைவேளை மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அணியினர் ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்தே மைதானத்திற்கு வருகைத் தரவேண்டியுள்ளது. அவர்களுக்கான வசதிகள் போதாமல் உள்ளது.ஏனைய நாடுகளின் அணிகள் தொடர்பாக நாம் பேசவில்லை.

எமது நாட்டு வீரர்களுக்கு, ஐ.சி.சி.யின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப உரிய செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.

உலகக் கிண்ண டி 20 தொடர் நடைபெறும் நெசோ எனும் விளையாட்டு மைதானமானது, கிரிக்கெட் விளையாட்டுக்கு தகுதியற்ற மைதானம் என்பதை ஐ.சி.சி.யும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.

விளையாட்டு வீரர்களினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்தான் நான் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறேன். எனவே, கட்சி பேதங்கள் கடந்து எமது அணிக்காக நாம் ஒன்றுபட வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...