எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முன் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் பெப்ரல் அமைப்பினால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விஞ்ஞாபனத்திற்கு சில அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.