துருக்கியிலிருந்து காசாவுக்கு அனுப்பப்பட்ட 20, 848 தேன் பீப்பாக்கள்!

Date:

துருக்கியின் தென்மேற்கு மாகாணமான முக்லாவில் உள்ள தேனீ வளர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில் இயற்கையான முறையில் உற்பத்திசெய்த 20,848 தொன் தேனை நேற்றுமுன்தினம் காசா மக்களுக்காக அனுப்பியுள்ளனர்.

முக்லா மாகாண தேனீ வளர்ப்போர் சங்கம் ((MAYBIR) தலைமையிலான ஒரு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தேன் பீப்பாக்கள் இஸ்ரேலிய அடக்குமுறையின் கீழ் வாழும் பலஸ்தீனியர்களுக்காக துருக்கி செம்பிறைச்சங்கம் மூலம்  மெர்சின் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன்போது முக்லா மாகாண ஆளுநர் இட்ரிஸ் அக்பியிக் குறிப்பிடுகையில்,

தற்போது நடந்து வரும் இனப்படுகொலையில் முக்லா மாகாணத்தின் தேனீ வளர்ப்பவர்கள் சங்கம் அலட்சியமாக இல்லை, உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக துருக்கி மாறியுள்ளது. மனிதாபிமான துயரங்களுக்கு மத்தியில் காசா போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துருக்கியின் ஆதரவையும் ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

துருக்கி, துருக்கிய செஞ்சிலுவை, செம்பிறைச்சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மனிதாபிமான உதவி பொருட்களை துருக்கி காசாவுக்கு அனுப்பியுள்ளது.

Popular

More like this
Related

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...

இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம்: வர்த்தகம் மற்றும் துறைமுக முதலீடுகளை மேம்படுத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை!

இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி...