பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு!

Date:

இலங்கையில் 40 வயதிற்கு மேற்பட்ட, இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் காரணத்தால் இவர்கள் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை உள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு இம்மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...