மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு!

Date:

ரயிலொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று (29) மாலை 06.30 மணியளவில் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கிப்  பயணித்த அஞ்சல் ரயில் சேவையே இவ்வாறு கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதன்காரணமாக குறித்த ரயில் மார்க்கத்தில் செல்லும் இரண்டு குறுகிய தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ரயிலினை தடமேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...