மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி: ஜனாதிபதி ரணிலும் பங்கேற்பு

Date:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தனது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய இந்திய அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ரஷ்தபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக எதிர்வரும் எட்டாம் திகதி சனிக்கிழமை பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...