இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் ஆட்சி அமைக்க அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது.
பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் கூட்டணி ஆட்சியே அமைக்கிறது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.
ஜூன் 9ஆம் திகதி மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வானது நாளை மறுநாள் (ஜூன் 8) தேதி நடைபெறும் என முன்னர் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்சமயம் வந்த தகவலின் படி ஜூன் 9ம் தேதி ஞாற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராகும் நிகழ்ச்சி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.