யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து விபத்து: சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றின் பின்பகுதியில் பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...