ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு

Date:

பிரதான மார்க்கம் மற்றும் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) காலை ரயிலில் இருந்து பிரதம கட்டுப்பாட்டாளர் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் ரயில் கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் ஊடாக இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேமுல்ல மற்றும் புலுகஹகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை மற்றும் வட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று (15) இரவு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையம் வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரை செல்லும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நிலையங்களுக்கும் இடையில் பயணிகளை மாற்றுவதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...