மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

Date:

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக, மொத்தம் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று (15) காலை 6:00 மணி வரையான நிலவரப்படி, எட்டு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுறது.

Popular

More like this
Related

டெங்கு பரவல் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

 மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...