வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகள் விற்பனை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக மாமிச உணவுகள் பற்றிய சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தம் செய்து, பொதி செய்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக இது குறித்து எச்சரிக்கையாக இருந்தோம்.நாடுமுழுவதும் தற்போது சுகாதார சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த கோழிகளின் இறைச்சி சிவப்பு நிறத்தில் காணப்படும். எவ்வளவு சூடாக்கி வேகவைத்தாலும் கிருமிகள் அழியாமல் போகலாம். இதுபற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கு தெரிவிக்கவும்.

சமூக வலைத்தளங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் இருந்தால் மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களைக் கொண்டுவருவதாக விளம்பரங்கள் வருகின்றன.

இதற்கு விழ வேண்டாம். இவை நுகர்வுக்கு தயாராக இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கும் பட்சத்தில் 1977 என்ற எண்ணிற்கு அறிவிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...