ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்ள தயாராகும் இஸ்ரேல்!

Date:

காசாவில் ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருவதாகவும் அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, ரபாவில் தனது நடவடிக்கையை பூர்த்தி செய்யும் நிலையில் இஸ்ரேல் இராணுவம் உள்ளதாகவும் எனினும் அதன் அர்த்தம் காசா யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதல்ல எனவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்காலத்தில் காசாவில் தற்போது நிலைகொண்டுள்ளதை விட குறைந்தளவு படையினரே தேவைப்படுவதாகவும் அங்கிருந்து படையினரை விலக்கி அவர்களை ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, வடபகுதி எல்லைக்கு எங்கள் படையினரை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் எனினும் தற்பாதுகாப்பே மிக முக்கியமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலும் மற்றொரு யுத்தத்தை நோக்கி நகர்கின்ற நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...