இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம்: இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள்: பேராயர்

Date:

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச பாலத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாலம் அமைப்பதன் ஊடாக 2,000 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் இல்லாமல் போகக்கூடும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலத்தை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும்.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...