இம்முறை ஹஜ் கடமைகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது: அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி மினாவிலிருந்து…

Date:

ஹஜ் கடமைகளுடைய அனைத்து வணக்க வழிபாடுகளும் இன்றோடு நிறைவுபெறுகின்ற நிலையில் புத்தளத்திலிருந்து சித்தீக் ஹஜ் டிரவல்ஸ் சார்பாக வழிகாட்டியாக சென்றிருக்கின்ற அஷ்ஷெய்க் ரியாஸ் தேவ்பந்தி அவர்கள் எமக்கு வழங்கிய செய்தி.

சுமார் 40 ஹாஜிகளோடு கடந்த மாதம் 23ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்து புனித மக்காவிலும் மதீனாவிலும் சில நாட்களை கழித்து விட்டு புனித ஹஜ்ஜினுடைய கடமையை நிறைவேற்றுவதற்காக “அய்யாமுல் ஹஜ்” என்று சொல்லக்கூடிய துல்ஹஜ் பிறை 8ஆம் நாள் முதல் இதுவைரையிலும் மினா, அரபா முஸ்தலிபா, போன்ற இடங்களிலும் ஹஜ்ஜினுடைய கிரியைகளையும் வாஜிபான கிரியைகளையும் நிறைவேற்றி வருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ் இன்று ஹஜ்ஜினுடைய அமல்களிலிருந்து முழுமையாக நாங்கள் விடைபெற்று விடுவோம்.

நாட்டிலிருந்து வந்ததிலிருந்து எங்களுக்கு தேவையான ஹோட்டல், தங்குமிடம், உணவு, இன்னோரன்ன எல்லா வசதிகளையும் எமது நிறுவனம் சிறப்பாக செய்து தந்துள்ளது.

நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நுஃமான் அவர்கள் ஹாஜிகளுக்கு இரவு பகலாக தியாகம் செய்து தன்னையே அர்ப்பணித்து அவர்களுக்குத் தேவையானவற்றை சிறப்பாக செய்து வருகிறார் என்பதற்கு நானும் என்னுடன் வருகைத்தந்த ஹாஜிகளும் சாட்சி.

சித்தீக் டரவல்ஸ் ஊடாக ஹாஜிகள் நீண்ட காலமாக ஹஜ்ஜினுடைய உம்ராவினுடைய பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த நிறுவனத்தினுடைய அர்ப்பணிப்பும் சேவையும் இந்நிறுவனத்தில் பயணித்த மக்களுடைய துவாவும் நிறுவனத்துடைய வளர்ச்சிக்கு காரணம் என்று நாங்கள் கூறலாம்.

மென்மேலும் இந்நிறுவனம் ஹாஜிகளுக்கு நல்ல பல பணிகளை செய்யவேண்டும் என துஆ செய்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...