எம்மை நிர்வாணப்படுத்திய பலஸ்தீனர்கள்: முன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹுட் ஒல்மெர்ட்

Date:

பலஸ்தீனர்களை நாம் துச்சமாக மதித்தோம் அவர்களின் பிரச்சனையை தீர்க்காமலேயே விட்டுவிடுவோம் என நம்பினோம்,  எமக்கு எதிராக எதுவுமே செய்யமுடியாது என்று நம்பினோம், காரணம் நாம் தான் இந்த உலகிலேயே அதிக பலம் வாய்ந்தவர்கள் என்ற மமதை, இறுதியாக நடந்திருப்பது என்ன? பலஸ்தீனியர்கள் எமக்கு சவாலாக மாறிவிட்டார்கள் என முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மெர்ட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இஸ்ரேல் பிரதமருடன் முன்னாள் உளவுத்துறை பிரதானி ஷெரோன் ப்ளும் நடத்திய Podcast நிகழ்ச்சியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘எமது காற்சட்டையையே கழற்றிவிட்டார்கள். அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளையும் திட்டங்களையும் நாம் முன்னரே அறிந்து வைத்திருந்தோம். ஆனால் அவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டோம்.

விளைவு என்னவென்றால் வெறும் 5000 பலஸ்தீனியர்கள் எமக்கு பாடம் புகட்டிவிட்டார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2008 இல் பிரதமராக இருந்தபோது, ​​ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க விரும்பினேன். காசா பகுதியை எவ்வாறு கைப்பற்றுவது மற்றும் ஹமாஸை அகற்றுவது எப்படி என்பது குறித்து நான் ஒரு ஒழுங்கான திட்டத்தை வைத்திருந்தேன், ஆனால் தேர்தலுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு எனது திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்ததால் அது நிறுத்தப்பட்டது,’ என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...