கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு: ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் சுகயீன விடுமுறை!

Date:

ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுப்பு தெரிவிப்பதால் பல பாடசாலைகளின் பிள்ளைகளை பாடசாலைக்கு வரவேண்டாம் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

பிள்ளைகளின் இரண்டாம் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதோடு இதன் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதேவேளை, அரச நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நடவடிக்கை இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...