தமிழகத்தில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை

Date:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில்  தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதேவேளை பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்துடன் பரப்புரையை தொடங்கினோம் , தற்போது ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மக்களின் இந்த தீர்ப்பே எங்கள் கூட்டணியின் வெற்றி, ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...