“நேரம் வந்துவிட்டது”.. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா அழைப்பு!

Date:

“முதற்கட்டமாக 6 வார கால போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்”

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஜோ பைடன் உள்ளார்.

பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரவாதப்போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஹமாஸை முற்றிலுமாக துடைத்தெறிவதாக சூளுரைத்த இஸ்ரேல், பாலஸ்தீனிய மக்கள் அதிகம் வாழும் காஸா மீது தாக்குதல் நடந்தி வந்த நிலையில் சமீபத்தில் ரஃபா நகரம் மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த மே 26 ஆம் தேதி நடத்திய ரஃபா அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உலகம் முழுவதும்

மிகக் கடுமையன கண்டனங்கள் எலுந்து வருகின்றன. இதற்க்கிடையில் ஹமாஸிடம் இஸ்ரேலிய பிணைக்கைதிகளும், இஸ்ரேலிடம் பாலஸ்தீனிய பிணைக்கைதிகளும் அதிக அளவில் உள்ள நிலையில் தங்கள் நாட்டவரை விடுவித்தால் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள பலஸ்தீனியர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஆரம்பம் முதல் இஸ்ரேலுக்கு ஆதரவாக அனைத்து வகை உதவிகளையும் செய்து வரும் அமெரிக்கா சார்பில் போர் நிறுத்ததுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...