பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் புத்தளத்தில் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அஸீஸ், அவர்கள்  கடந்த 23 ஆம் திகதி முஸ்லிம் ஹேண்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உள்ளூர் குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள், கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் கணினிகள் ஆகியவற்றையும் வழங்கி வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் கல்விக் கனவுகளைத் தொடர உதவுவதற்கு பாகிஸ்தான் முழுமையாக உதவும் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, நாடளாவிய ரீதியில் தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு முழு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது.

அல்லாமா இக்பால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 480 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டதாரி, முதுகலை மற்றும் கலாநிதி துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...