பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்கள் இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இலங்கை பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை இலங்கையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதற்கு இலங்கை தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகக் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் கூறினார்

மேலும் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்க ஜப்பான் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், இந்த நாட்டில் ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான நிதியைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த முயற்சிப்பதொடு நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கையை முழுமையாக ஆதரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...