புதுடெல்லியை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  புதுடெல்லியை சென்றடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) டில்லிக்கு வருகை தந்துள்ளனர்.

2024 பொதுத்தேர்தல்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் தலைவர்கள் இன்றைய தினம் மாலை இராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும் விருந்துபசாரத்திலும் பங்கேற்கவுள்ளனர்.

பிரதமர்  மோடியின் மூன்றாவது பதவிக்காலத்திற்கான பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக இத்தலைவர்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...