பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

Date:

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு  இரண்டு நாட்களுக்கு சிறைக்கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிட அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு உணவு மற்றும் இனிப்பு பொதிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி பார்வையாளர்கள் வர வேண்டும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...