முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

Date:

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.

இதன்படி, இலங்கையில் உள்ள சுமார் 34,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இதே கொடுப்பனவு கிடைக்குமென அவர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், முன்பள்ளி ஆசிரியர்களின் 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...