லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Date:

லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு ஒரு கிலோ 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் வெள்ளை கௌப்பி 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும் சிவப்பு கௌப்பி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த அத்தியாவசியப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...