விரைவில் தனுஷ்கோடி – மன்னாருக்கிடையில் பாலம்

Date:

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு உள்ளமை தொடர்பான ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கு வருகை தந்தபோதே ஜனாதிபதி  இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே கடல் வழியாக 23 KM க்கு பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை – இந்தியாவுக்கிடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் விரைவில் நிறைவடையும்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...