தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமது பதிலை அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் கடமையாற்றுவதற்கும் செயற்படுவதற்கும் உயர் நீதிமன்றம் இன்று (24) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவில் ​​பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஐஜிபி தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் தேவை என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

அதன்படி, அமைச்சரவையின் பதிலை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பதே மிகவும் பொருத்தமானது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...