2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.