இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி

Date:

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று(04) யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் பூதவுடல் நேற்று(03) பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வௌிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 4 மணி வரை அன்னாரின் பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 30ஆம் திகதி காலமானார்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...