ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவுக்குமிடையே விசேட ஒன்றுகூடல்: யாப்பினை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் பணிகளை முன்னெடுப்பது குறித்தும் கவனிப்பு

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழுவினர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா-புத்தளம் மாவட்டக் கிளை நிர்வாகிகளுக்கிடையிலான விஷேட ஒன்றுகூடலொன்று நேற்று முன்தினம் (02) ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜம்இய்யாவின் இலக்கு, பணிக்கூற்று மற்றும் யாப்பினை அடிப்படையாகக்கொண்டு புத்தளம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விதத்தில் ஜம்இய்யாவின் சமய, சமூகப்பணிகளை வீரியமாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதோடு அம்மாவட்டத்தில் மேலும் பிராந்தியக் கிளைகளை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி. ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிலா, உப செயலாளர் அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், ஆலிம்கள் விவகாரக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்,ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் என்.டி.எம். ளரீஃப், ஊடகக்குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அரபிக்கல்லூரிகளுக்கான குழுவின் துணைச்செயலாளர் அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...