பற்றி எரியும் பங்களாதேஷ்: இடஒதுக்கீடு எதிர்ப்பால் கடும் வன்முறை.. 32 பேர் பலி

Date:

பங்களாதேஷில் அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 32 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு2,500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 2018இல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் தொடங்குவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

இந்த நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடாத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் அரச தொலைக்காட்சி தலைமையலுவலகத்திற்கு தீ வைத்ததையடுத்து அங்கு பலர் சிக்குண்டனர்.

அதேவேளை, நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மாணவர்களை கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடஒதுக்கீடு என்பது வங்கதேச நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி இறந்தவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் வரை தொடர்கிறது.

இதனால் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஏனென்றால் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்றால் மீதமுள்ள 70 சதவீத இட ஒதுக்கீட்டில் பெண்கள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தலா 10 சதவீதம், சிறுபான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் என்று மொத்தம் 56 சதவீதம் செல்கிறது.

இதனால் பலருக்கும் அரசு பணிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...