பாணந்துறை மாணவிகளுக்கு மோஜோ இலவச செயலமர்வு

Date:

அரச அங்கீகாரம் பெற்ற ‘பஹன மீடியா நிறுவனத்தின்’ பஹன அகடமி ஜுலை 10, 11 ஆம் திகதி பாணந்துறைப் பகுதியில் இலவச மோஜா ஜெர்னலிஸம் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

திஹாரிய சுமையா அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ள இருநாள் செயலமர்வில் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர் இஸ்பஹான், மீள்பார்வையின் முன்னாள் ஆசிரியரும் ‘நியூஸ்நவ்’ செய்தித்தளத்தின் பிரதம ஆசிரியருமான பியாஸ் முஹம்மத், தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் பஹன அகடமியின் பாடத்திட்டப் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத் ஆகியோர் வளவாளர்களாக வருகைத்தர இருப்பதுடன் இரண்டாம் நாள் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு பிரதம அதிதியாக அஷஷெய்க் முஜீப் சாலிஹ் மற்றும் அதிதிகளாக அஹதிய்யா புகழ் ஏ.எல்.எம். அஸ்வர் உள்ளிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பாணந்துறை பகுதியில் இம்முறை சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய 50பேருக்கு மட்டுமே சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளதுடன் இச்செயலமர்வில் கலந்துகொள்வோர் ஸ்மார்ட் கைப்பேசியுடன் வரவேண்டும் என பஹன அகடமி கேட்டுக்கொள்கிறது.

மேலதிக விபரங்களுக்கு 0772614897 (அஸ்வர்) அல்லது 0770347779 (ஹில்மி) தொடர்புகொள்ளலாம்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...