அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Date:

அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சைகுத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின்போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது 55 வயதுடைய பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த என்பவரும் 38 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ள நிலையில், பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சைகுத்தும் நிலையத்தின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில்,

துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” என்பவர் எனக்கு 16 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்து எனது பச்சைகுத்தும் நிலையத்தின் திறப்பு விழாவிற்குப் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்தவை அழைக்குமாறு கூறினார்.

பின்னர், “லொக்கு பெடி” கூறியபடி எனது பச்சைகுத்தும் நிலையத்தின் திறப்பு விழாவிற்குப் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்தவை அழைத்திருந்தேன்.

ஆனால் இந்த கொலை திட்டம் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் இந்த கொலை சம்பவத்துக்காகத் துப்பாக்கித் தாரிகளுக்கு உதவி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயில் தலைமறைவாக உள்ள  பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” மற்றும் “கோனா கோவிலே ஷாந்த ” ஆகியவர்களின் தலைமையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானுக்கும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...