இலங்கை வருகின்றார் எலான் மஸ்க்: Starlink இன் இணையச் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Date:

உலகின் முதல் நிலை பணக்காரரான பிரபல அமெரிக்க வர்த்தகர் எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான Starlinkஇன் இணையச் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் பூர்வாங்க அனுமதியை வழங்கியுள்ளது.

இதற்காக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்து, அதன் மூலம் அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

“இதற்கான பணிகளை முடிக்க ஜூலை இறுதி வரை கால அவகாசம் அளித்துள்ளோம்.

இருப்பினும், பணியை முன்கூட்டியே முடிக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளோம் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் உரிமையாளர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சேவையை செயல்படுத்த இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்று பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...