எரிபொருள் விலை திருத்தம் வழமை போன்று இன்று நள்ளிரவில் இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று (31) நள்ளிரவில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறாது என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.