இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையான மக்கள் இன்று (19) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்குப் பிரவேசித்திருந்தால், அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளத்துக்குச் சென்று திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக் கொண்டு, அதன் சேவையைப் பெற்றுக்கொள்ளப் பிரவேசிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரியுள்ளார்.