காசாவில் ஐ.நா நடத்தி வந்த பாடசாலை மீது குண்டு வீச்சு: நாளுக்கு நாள் உக்கிரமாகும் இஸ்ரேல் தாக்குதல்!

Date:

காசவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய காசாவின் நுசெய்ரட் அகதி முகாமில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த கட்டடத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

புழுதியும் இடிபாடுகளும் நிறைந்து காணப்படும் புகைமண்டலம் நிறைந்த வீதியில் பொதுமக்கள் அலறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மும்முரமான சந்தைக்கு அருகிலிருந்த கட்டிடத்தின் மேல் தளம் இலக்குவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

7000 பேர் அந்த கட்டிடத்தில் அடைக்கலமடைந்திருந்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

குர்ஆன் ஒதிக்கொண்டிருந்தவேளை  சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என பெண்ணொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்த பாடசாலையை முன்னெச்சரிக்கையின்றி இலக்குவைப்பது இது நான்காவது தடவை என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...