கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!
கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம் மிக்க கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடன் இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்படாவிட்டால் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.