இந்தியாவும் இலங்கையும் 50 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்திற்கான ஒரு அலகுக்கான விலையில் இணக்கம் கண்டுள்ளன.
இதனடிப்படையில், ஒரு அலகுக்கு 0.068 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையேயான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முன்னதாக சர்ச்சைக்குரிய நிலக்கரி மின்சார நிலைய திட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சூரிய ஒளி மின்சார நிலையம் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.