தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

Date:

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம் பெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக கடந்த்  மே 04 ஆம் திகதி தொழில்நுட்ப அமைச்சினால் இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இது 28 வருடங்களின் பின்னர் திருத்தப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றும் வகையில், போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தலை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இந்தத் திருத்தச்சட்டமூலம் வழங்குகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...