ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை (02)நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதியின் விசேட உரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பான விவாதமொன்றை கோர எதிர்க்கட்சிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இன்று நடைபெறவிருந்த இதனுடன் தொடர்புடைய பிரேரணை குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.